சாந்தி சந்திரசேகரன்/கனவுலகத்தின் ரகசியம்..!

ஒரு நாள் மாயா என்ற சிறுமி அவர்கள் வீட்டின் பின்னால் இருந்த காட்டிற்குச் சென்றாள். அப்போது, சிறிய தங்கக்கிரீடம் அணிந்த ஒரு வண்ணப்பறவையைப் பார்த்தாள்.
“மாயா என்னுடன் வா!!” என்றது அப்பறவை .
அது பேசிய அதிர்ச்சியிலிருந்து அவள் மீள்வதற்குள், அவள் புது உலகத்திலிருந்தாள். அங்கே வண்ணங்களற்ற பூக்களும், சோகமான பொம்மைகளும் இருந்தன.
அந்த உலகத்தின் சிரிப்பு மலர் வாடிப்போனதால், அவ்விடமெங்கும் சோகம் ஆக்கிரமித்திருந்தது .
அதைப் பார்த்த மாயா..அவளது அம்மா சொன்ன வேடிக்கையான கதைகளை எல்லாம் சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்தாள்.
அந்த சிரிப்பொலியில், வாடிய மலர் மெதுவாகத் திறந்து, ஆயிரம் வண்ணங்களில் பூத்தது.
மாயா மீது வந்தமர்ந்த பறவை, “ உலகத்தில் ஆகச் சிறந்த செயல் மகிழ்ச்சியைப் பரப்புவது தான்..!சிலரின் சூழ்ச்சியால் என் உலகம் தொலைத்த சிரிப்பை மீட்ட உனக்கு நன்றி ”. என்றது.
அன்று முழுவதும் அங்கே மகிழ்வாய் இருந்தாள்.மறுநாள் காலை மாயா தன் வீட்டில் கண் விழித்த போது, அவள் அருகில் ஒரு வண்ண கிரீடமும் அந்தப் பறவையின் இறகும் கிடந்தன

115

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன