செல்லம் சேகர்/அர்த்தமுள்ள ஆன்மிகம் 8

பிள்ளையார் சுழிக்கு அறிவியல் விளக்கம்
அந்த காலத்தில் எந்த ஒரு கடிதமோ அல்லது ஒரு பேப்பரில் மளிகை சாமான் லிஸ்ட் போடும்போது ஒரு சுப விஷயங்கள் ஆரம்பிக்கும்போதும் பிள்ளையார் சுழி போடுவது வழக்கம் . இந்த கணனி கால மயக்கம் தொலைந்து போன பல விஷயங்களில் கடிதம் எழுதுதல் மறைந்தது பிள்ளையார் சுழியும் அடுத்த தலைமுறைக்கு தெரியாமல் போனது .
துரித ஆன்லைன் வர்த்தகம் வந்தபின் பிள்ளையார் சுழியோடு லிஸ்ட் போட்டு வாங்குவது நம் அடுத்த தலை முறைக்கே இல்லை .
இதில் பிள்ளையார் சுழி என்றால் நம் மூன்றாம் தலை முறை குழந்தைகளுக்கு நிச்சயமாக நாம் எடுத்து சொல்லி தான் புரிய வைக்க வேண்டும் . அதிலும் அதன் காரணத்தையும் அறிவியலோடு தொடர்பு படுத்தி விளக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.
பிள்ளையார் சுழியின் ஆன்மீக காரணம்
தமிழ் எழுத்தான உ என்னும் வடிவத்தை போட்டு அதனடியில் இரு சிறிய கோடுகளை போட்டு பிள்ளையார் சுழி என்பர் . இதன் வட்ட வடிவம் ப்ரும்மத்தையும் வளைவும் கோடுகளும் பூமியையும் குறிக்கும் …அதாவது பிரும்மத்தில் இருந்து பூமி தோன்றியதாக உணர்த்துகிற சின்னமாகும் .
பிள்ளையார் முதற்கடவுள் தடை நீக்குபவர் என்பதால் இதை பிள்ளையார் சுழி என்கிறோம் .
முழுமுதற் கடவுள் பிள்ளையாரை வணங்கிதான் நமது எந்த செயலையும் துவங்குகிறோம் …அந்த தும்பிக்கையானின் மேல் வைக்கும் நம்பிக்கை நம் செயலையும் வெற்றியை தருகிறது .
“பிள்ளையார் சுழி போட்டு நல்ல விஷயத்தை துவங்கி விட்டேன் என்று சொல்லும்போதே அது ஒரு நேர்மறை எண்ணத்தை நமக்குள் விதைக்கிறது . அது நம் ஆழ்மனதில் இறைவனின் அருளால் நிச்சயம் தடை ஏதும் ஏற்படாது என்று துணிவு தருகிறது .
பூமியின் எனர்ஜி வடிவத்தை பார்த்தல் அறிவியல் ரீதியாக உலகத்தின் எனர்ஜியான (ஒளி …ஒளி மற்றும் அதன் அலைவரிசை ) அனைத்து அலைகளும் (Light, Sound, Cosmic waves) சுருள் வடிவிலும் (Spiral), அலை வடிவிலும் (Wave) தான் பயணிக்கின்றன.பிள்ளையார் சுழியில் உள்ள வட்ட வடிவம் (சுழி) என்பது பூமியின் துவக்கத்தையும் , அதன் நீண்ட சிறு கோடுகள் அதன் முடிவற்ற அதாவது (infinity )தன்மையையும் குறிக்கிறது. இது பூமியின் ஆற்றலை ஈர்க்கும் ஒரு வடிவ அமைப்பாகக் கருதப்படுகிறது.
இதன் மூலம் நாம் புரிந்து கொள்வது பிள்ளையார் சுழி என்பது வெறும் ஆன்மீக சின்னம் மட்டுமல்ல அறிவியல் ரீதியாகவும் நம்மை ஒருமுகப்படுத்தி நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க செய்கிறது .
ஆன்மீக ரீதியாக நாம் ஒரு செயலை செய்யும்போது போடும் பிள்ளையார் சுழி அல்லது நம் மனதில் தியானிக்கும் பிள்ளையார் சுழி அறிவியல் ரீதியாக அந்த செயலுக்கான மனதை ஒருமுக படுத்தி நம்மை ஊக்குவிக்கிறது .
பிள்ளையார் சுழி ஆன்மீகத்தோடு அறிவியல் ரீதியாகவும் நாம் துவங்கும் அனைத்திற்கும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்து நமக்கு வெற்றியை தருகிறது .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன