
சடாரென்று புல்லட்டில் வந்த ஒருவன் ஒரு போட்டோவை எடுத்து டீ கடைக் காரரிடம் காட்டினான். “ இந்தப்
போட்டோவிலிருக்கும் பெண்ணை பார்த்திருக்கீர்களா?” என கேட்க, பார்த்த கடைக்காரர் அதிர்ச்சியுற்றார்.
அது வேறு யாருமல்ல. நேற்று பக்கத்து ஊர் ரவுடிகளிடமிருந்து தப்பித்து வந்த அநாதைப் பெண் மீனாதான்.
தன்னை நாடி வந்த மீனாவைக் காட்டிக் கொடுக்க இஷ்டமில்லை டீ கடைக்காரருக்கு. அதனால் “ இல்லை “ என பதில் சொல்ல
வந்தவன் எங்கு தேடியும் மீனா கிடைக் காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றான்.
கடையை சாத்திவிட்டு வீட்டினுள்நுழைந் தார் கடைக்காரர். மீனா தரையில் அமர் ந்தவாறு வரைந்த ஓவியம் ஒன்றில் மிட்டாய் கலரில் உடையணிந்த ஒரு சிறுமியும் அவள் தலையில் ஒரு பறவையும் காணப்பட்டனர்.
“ அடேடே, படம் ஜோராயிருக்கே !” என கை தட்டிய டீ கடைக்காரர், அந்த ரவுடி வந்த விஷயத்தைச் சொன்னதும் முகம் சுண்டிப்போனாள்.
“ புள்ள விசனப்படாதே. எங்களுக்கு குழந்தை குட்டி கிடையாது. உன்னை எங்க மகளா ஏத்துக்குறோம் “ எனசொல்ல கடைக்காரரின் மனைவியும்“ ஆமாம் மீனா,
நீ எங்கப் பொண்ணு தான். “ என்றாள்.
மீனாவுக்கு ஆசுவாசமாக இருந்தது.
131
