
நெடும் போரின் விழுதாக புராதன வள்ளி புரம் நகரே ஊசலாடிக் கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்கே பழமையான நகரம் அது. பிறக்கும் குழந்தைகள் எல்லாவற்றுக்கும் கண், காது, மூக்கு, தலை ஏதாவது ஒன்றில் குறைபாடு. அணுக்குண்டுகளின் தாக்கம். அந்தப் பகுதியிலே பொண்ணு மாப்பிள்ளை எடுக்கக் கூடாதென சில கிராமங்கள் தடை விதித்துக் கொண்டன. சிட்டு வீட்டில் அவள் வளர வளர அவளது குறைகள் ஒன்றொன்றாக வெளியே தெரிய வந்தன. அவளது அம்மாவுக்கோ அவ்வூர் பெருமாள் மேலே கோபம். ” கடவுளுக்குக் கண்ணில்லையா ” எனப் புலம்பாத நாளே அவளது காலண்டரில் கிடையாது. சிட்டுவை அவளது தெருக் குழந்தைகளே விளையாட்டில் சேர்த்துக் கொள்வதில்லை. அவளுக்கோ விடுமுறை நாட்களில் அச்சலாத்தியாக இருக்கும். வீட்டிலே எதையாவது நோண்டிக் கொண்டிருப்பாள். அம்மா உள்ளூர் தமிழாசிரியை. வாங்கும் சம்பளம் வீட்டு வாடகைக்கும் சாப்பாட்டுக்குமே பற்றாத நிலை. விலைவாசியோ ட்ரோன் போல மேலேயே சுற்றிச் சுற்றி வருகிறது. என்றுதான் இறங்குமோ?
ஒரு நாள் காலையில் கடற்புறமிருந்து ஒரு பறவை அவள் வீட்டு முற்றத்தில் இறங்கியது. அதற்கும் அணுக்குண்டு தாக்கம். சிட்டுவுக்கு அதைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. சில அரிசி மணிகளைத் தூவினாள். பறவைக்கோ சந்தோஷம். அன்றிலிருந்து அந்தப் பறவையே சிட்டுக்கு விளையாட்டு ஜோடி.
(132 வார்த்தைகள்)
