
பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் செயற்கை அறிவின் (AI ) ஆக்கிரமிப்பால் மனிதன் மாறிவிட்ட காலம் பழைய சஞ்சித , பிராரப்த பதிவுகள் மாறி புதிய ஆகாமியத்தில் ஐக்கியமான நேரம் .
குடும்பம் இருந்தது , குழந்தைகள் இருந்தனர், சண்டை இருந்தது, சமாதானம் இருந்தது. அத்தனையிலும் வேகமும் திறமையும் கலந்த ஒரு செயற்கைத்தனம் .
இதற்குள் மாட்டிக்கொள்ளாமல் சில பழங்குடி இனங்களும் இருந்தார்கள். பழைய பதிவுகளோடு , பொதிகை மலைப் பள்ளத்தாக்கில் விண்வெளிப்பயணத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த செயற்கை அறிவு இளைஞனின் பயணத் தட்டு தடம் மாறி பொதிகை மலைப் பள்ளத்தாக்கில் இறங்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவனைக் காப்பாற்றியவள் அந்தப் பழங்குடிப் பெண்.
அவனிடம் கேட்டாள் ‘ ரெம்ப வலிக்குதா ‘. வார்த்தையில் இருந்த அன்பின் இயற்கை புதுமையாக இருந்தது. மயங்கி அவளை கட்டி இறுக்கினான். அந்த வேகம் அவளுக்குப் புதுமையாக இருந்தது.
இருவரும் இணையும் நேரம் வெவ்வேறு விதமான சஞ்சித , பிராரப்தப் பதிவுகள் இணைந்து புதிய ஆகாமியப் பதிவுகள் அங்கே ஆரம்பம் ஆயின. பொதிகை மலை உச்சியிலே புறப்பட்டது புதிய தென்றல் ஒன்று
120
