
இந்துவுக்கு அந்த நடிகனுடன் நடிக்கவே பிடிக்கவில்லை. நெருக்கமான காட்சிகளில் அவன் வரம்பு மீறி நடிப்பான். அவனுடன் சேர்ந்து நடிக்க வேண்டுமென்றால் கசப்பாக இருக்கும்.
அந்த நடிகனோ அவள்தான் கதாநாயகியாக நடிக்க வேண்டுமென்று சிபாரிசு செய்வான்.
வேண்டா வெறுப்பாக அவனுடன் நடிப்பாள். ஒருமுறை காதல் காட்சியில் அவன் நடிக்கும்போது அவள் உதட்டில் முத்தம் கொடுத்து விட்டான். இதை அவள் எதிர்பார்க்கவில்லை. அவளும் கோபமாக அவன் கன்னத்தில் அறைந்து விட்டாள்.
இப்போது வருகிற படங்களில் அவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை.
56
