மரு.ச.கந்தசாமி/வெள்ளித்திரை

“என்ன விலை அழகே, உன்னை விலைக்கு வாங்க முடியுமா? எனக் கதாநாயகன் நரேன் கூற ,கதாநாயகி தாரா,” அழகுக்கே விலையா? என்னையே தந்து விட்டேனே” என்று டயலாக் பேசினாள். இயக்குநர் சங்கர் ” கட் , கட், என்னம்மா ரெண்டு பேரும் காதல் ஜோடியா இருந்தாலும், காட்சியில் ஒன்றவில்லையே? மறுபடியும் டேக் என்றார். அவருக்குப் புரியவில்லை இரண்டு பேரும் வேண்டுமென்றே தங்கள் காதல் ரசத்தை பரிமாறிக் கொள்ள டேக் மேல் டேக் வாங்கினார்கள். இதில் தரவிற்கு இடையே டச்சப் டைம் வேறு.கதாநாயகன் நரேன் “இயக்குநர் சார் இதே சீனை நீங்கள் சுவிட்சர்லாந்தில் எடுத்திருந்தால் ஒரு டூயட்டோட பாட்டும் ஹிட்டாகும் ” என்றார் .இயக்குநர் சங்கரோ “ஏம்ப்பா உங்கள் காதல் டூருக்கு நான் தான் கிடைச்சேனா ?”எனப் புலம்பினார். பின்னால் மானிட்டரை அமர்ந்து ரஷ் பார்த்துக் கொண்டிருந்த தயாரிப்பாளரோ” இந்த ஜோடி நமக்குப் பல கோடி செலவு வைத்து விடுமோ ?”எனப் பயந்தார். ஒரு வழியாக பத்து டேக்குக்கு மேல் ஓகே ஆக, ஷூட்டிங் பேக்கப் ஆனது. ஏதோ ஷூட்டிங் ஸ்பாட்டில் இன்றைய நாள் கழிந்தது மகிழ்ந்து நரேன் தாரா ஜோடி பிஎம்டபிள்யூ கார் ஏறி ஹோட்டலுக்கு பறந்தது.

127

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன