அர்ஜுனன் /மாறியது உறவு

நேபாள எல்லையோரம் இருந்த அந்த புனல் மின்சார நிலையத்தில் பணிபுரியும் ரிஷியும், மேக்னாவும் வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஒருவருக்கு ஒருவர் அறிமுகமில்லை.
அன்று தோன்றிய திடீர் வெள்ளத்தில் அந்த மின்சார நிலையமே தகர்ந்து விழத்தொடங்க, எல்லோரும் உயிர் பாதுகாப்பு தேடி வெளியே ஓடினர்.
மேக்னா நின்றுகொண்டிருந்த இடத்தில் மேற்கூரை விழுந்ததால், அவளது கால் இடிபாட்டுக்கு இடையில் மாட்டிக் கொண்டது.
அவளது குரல் கேட்டு அந்தப் பக்கம் வந்த ரிஷி, அவள் கீழே விழுந்துவிடாமல் இருக்கத் தாங்கிப் பிடிக்க, அவர்கள் இருவரும் இடிபாட்டில் சிக்கிக் கொண்டனர்.
அவர்களால் பாதுகாப்பாக நிற்கத்தான் முடிந்தது; அசைய முடியவில்லை.
ஆற்றுநீர் மெல்லமெல்ல குறைந்தது போலவே, வெளிச்சமும் குறைந்து, இருள் சூழ்ந்தது.
மறுநாள் காலை இவர்களது கூக்குரல் கேட்டு, மீட்பு பணியினர் வந்து அவர்களை மீட்டனர்.
மேக்னா முதலில் காப்பாற்றப்பட, ரிஷி பின்னர் வெளியில் வந்தான்.
“நீங்கள் இருவரும் உடன் பணியாளர்களா?” என்று மீட்பு பணியினர் கேட்டனர்.
“நேற்று வரை உடன் பணியாளர்கள் தான், ஆனால்.. இப்போது..” என்று மேக்னா நாணத்துடன் தலை குனிந்துகொள்ள,
“காதலர்கள்” என்று புன்னகையுடன் முடித்தான் ரிஷி.

120

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன