சசிகலா விஸ்வநாதன் /அன்பின் அணப்பு

எதிர்பாராமல் வேலை போய் விட்ட விரக்தியில் பகலில் கடற்கரைக்கு வந்திருந்தாள், சியாமளா. நேற்றுதான் அவளுடைய பெற்றோர் இந்தியாவிலிருந்து வந்திருந்தனர். அவர்கள் வருகைக்காக நிறைய ஏற்பாடுகள் செய்திருந்தாள்.இந்த விஷயம் தெரிந்தால் அவர்கள் எத்தனை வருத்தம் அடைவார்கள்! வேலையில்லாமல் அமெரிக்காவில், ஒரு நாள் கூட வாழ முடியாது. அறுபது நாள்களுக்குள் எப்படி வேலை கிடைக்கும்? நினைக்க, நினைக்கத் துக்கம் அவளை விழுங்கியது. மெதுவாக அலைகளினூடே நடக்க ஆரம்பிக்கும் சமயம், பெரிதாக அலை அடிக்க தடுமாறி விழுந்தவள், எழுந்திருக்க முயலும் சமயம், வலுவான கரம் அவளைத் தூக்கி நிறுத்தி அணைத்தது. காதலன் ரகுநந்தன். அவளது அலைபேசி இருக்குமிடத்தை அறிந்து கொண்டு, அவளைத் தேடி வந்திருக்கிறான்.” ஸ்யாமளி! வேறு வேலை கிடைக்காது; என்று எப்படி நினைத்தாய்? என் அழைப்பிற்குப் பதில் அளிக்காமலிருந்ததினால், உன்னைத் தேடியே நான் வந்தேன். நாளை உனக்கு வேலைக்கான நேர் காணல் இருக்கிறது. வாழ்வில், விழுவதும் தோற்பதும் சகஜம். விழுந்தவன் எழுந்திருக்கவும், தோற்றவன், போராடவும் முயல, வாழ்வில் சோதனைகள் சாதனைகளுக்கான சந்தர்ப்பங்களே! நான் கூட நிற்கும்போது ,உனக்கு அச்சம்? வாழ்வின் சவால்களைச் சேர்ந்தே சந்திக்கலாம்” என்றவுடன், துணிவுடன் சற்றே புன்னகைத்தாள்.

(125 )

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன