ருக்மணி வெங்கட்ராமன் /கனவு உலகம்

காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை ஆரம்பித்து விட்டது. வேலைப் பார்க்கும் பெற்றோர்களுக்கு சவால் தான்.
பள்ளி லீவ் என்றால் குழந்தைகளை தனியே விட்டு விட்டு செல்ல முடியாமல் ‘டே கேரில்’ குழந்தைகளை விட்டுச் சென்றனர்.
நதியாவை டே‌ கேரில் விட்டு விட்டு சென்றார் அவள் அம்மா.
தனியாக உட்கார்ந்து இருந்த நதியா ஒரு பெண்ணின் படம் வரைந்தாள்.
செய்தி தாளை கத்தரித்து அந்த பெண்ணிற்கு ஆடை ஒட்டினாள். கண்களை கருப்பு நிறக் கலர் கொண்டு ஒட்டினாள். அதனுடன் பேச ஆரம்பித்தாள்.
அந்தப் பெண்ணும் பதில் சொல்ல ஆரம்பித்தாள்.‌ நதியாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.
சிறிது நேரத்தில் அங்கு ஒரு பறவை கிரீடத்துடன் வந்தது.
ஓவியப் பெண் “நீ அழகாக என்னை வரைந்து இருக்கிறாய். உன்னை ஒரு புது உலகத்திற்கு அழைத்துச் செல்கிறேன்.
அடுத்த நொடியில் பறவை நதியாவையும் ஓவியப் பெண்ணையும் மலர்கள் நிறைந்த சோலைக்கு அழைத்துச் சென்றது.
அழகிய மலர்களைக் கண்ட நதியாவிற்கு மகிழ்ச்சி. பக்கத்தில் இருந்த ஓடையில் இருந்து நடக்க முடியாமல் நடந்து சென்று கைகளால் சிறிது சிறிதாக தண்ணீர் கொண்டு வந்து ஊற்றினாள்.
சிறிது நேரத்தில் ஏதோ ஒரு விலங்கு வலியால் முனகும் சத்தம் கேட்டது. நதியா மெல்ல மெல்ல அந்த இடத்திற்கு வந்தாள். குட்டி யானையின் வலது காலில் ஏதோ குத்திக் கொண்டு இருந்தது. அதை எடுத்து விட்டு தன் கவுனில் இருந்து துணியைக் கிழித்து கட்டினாள். அங்கிருந்த கண்ணாடித் துண்டுகளை சிரமப்பட்டு பொறுக்கி எடுத்துக் கொண்டாள். அதை கீழேக் கிடந்த ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டுக் கொண்டாள்.
இதையெல்லாம் பார்த்த பறவை தன் தலையில் உள்ள கிரீடத்தை நதியா தலையில் வைத்தது. பத்திரமாக அவளையும் ஓவியப் பெண்ணையும் கொண்டு வந்து விட்டு விட்டது.
ஓவியப் பெண் பறவையுடன் பறந்து விட்டது.
போலியாவால் பாதிக்கப்பட்டு கால் ஊனத்துடன் நடக்கும் நதியா தலையில் கிரீடத்துடன் அவைச் சென்ற திசையை நோக்கினாள்.
மனம் முழுவதும் ஆனந்தம்.
கனவா? நனவா?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன