
அருண் ஒரு ஐடி கம்பெனி ஊழியர் அவன் கம்பெனியில் பணிபுரியும் ஸ்ரேயா வை காதலித்து திருமணம் முடிந்தது.
எல்லாம்நன்றாகப் போய்க் கொண்டு இருந்த போது ஒரு சிக்கல்.
அதாவது ஸ்ரேயாவுடன் படித்த பள்ளி மாணவன் அதே கம்பெனியில் வேலைக்கு வர அவனுடன் ஸ்ரேயா அதிகம் பேசப் பேச அருண் டென்ஷனான்.
இருவரும் ஒரே நேரம்
சாப்பிட போவது, வீட்டுக்குப் போவது இதனால் ரொம்ப ரொம்ப சந்தேகம் அடைந்த அருண் அடிக்கடி கோபப்பட்டான். தன்னிலை மறந்தான்.
ஒரு நாள் மாலை மெரினா பீச் சென்று யோசிக்க ஆரம்பித்த போது ,பக்கத்தில் இருவர் பேசியது காதில் விழுந்தது. அருண் மாதிரி சந்தேகம் கொண்ட ஒருவன், சந்தேகத்தில் நிலை மாறி குடி, புகை என மாறி ஆளே மாறி விட அதன்பிறகு கவுன்சிலிங் மூலமாகப் பழைய நினைவுக்கு வந்த விபரம் தெரிய வந்தது.
அடடா நாம் தான் சரியாக விசாரிக்காமல் இப்படி இருக்கிறோம் என எண்ணி அன்று இரவே ஸ்ரேயா விடம் பேசி சந்தேகம் தீர்ந்தது என்று சொல்லவும் வேண்டுமா?
112
