
“அம்மா ஆஆ” என சத்தமா கத்திய 5 வயது மகன் சாஸ்வந்தின் குரலில் பயந்து சமையலறையில் இருந்து ஓடிவந்த நளினி “ ஏண்டா இப்படிக் கத்தி பயமுறுத்தறே , என்னாச்சு இப்போ? என்று பதைபதைத்தாள் .
“ இங்கே பார் , என் கனவில் வந்த அதே வீடு பேப்பரில் கொஞ்சம் பழசா விற்பனைக்குன்னு விளம்பரம் . அந்த நாய், போஸ்ட் பாக்ஸ் எல்லாம் இருக்கு. அங்கே போகணும் “
அவன் காட்டிய பேப்பரில் கனவில் வந்த வீட்டை அவன் வரைந்த ஓவியத்தில் இருந்தது போலவே அப்படியே அச்சு அசலா மாறாமல் இருக்க, கொஞ்சம் அதிர்ச்சியும் ,கூடவே பயமும் சேர மகனோடு காரில் கிளம்பினாள்.
அந்த வீட்டருகில் போய் அழைக்க வந்தவர் “அந்த வீட்டு சொந்தக்காரர் என்றும் தங்கள் ஒரே மகனைப் பறி கொடுத்த சோகத்தில் மனநலம் குன்றி மனைவி இறந்து விட, மகன் பெயரில் இருக்கும் வீட்டை விற்கிறேன் “ என்றார்.
நளினி மனதில் தோன்றிய கேள்வி “ உங்க மகன் எப்போ தவறினார்?. அவர் சொன்னார் சாஸ்வந்த் பிறந்த நாளை.
118 வார்த்தைகள்

Sentiment ஐ Touch பண்ணிய சிறு கதை இந்து. அருமை 👌👌👌