இந்திரநீலன் சுரேஷ்/பூட்டு சாமியார்


பொறை வாங்கிப் போட்டதுக்கு நன்றிங்கையா.

இப்படிதான் தாடி வச்சுக்கிட்டு, பெரியவர் ஒருத்தர் தெனம் வந்து வீட்டு வாசல்ல இருக்கிற ஒடஞ்ச நாற்காலில உக்காருவாரு.

கொஞ்ச நேரம் அழுவாரு. அப்பப்ப பூட்ட உலுக்கிப் பாப்பாரு. தேம்பி தேம்பி அழுவாரு.

யாராவது கேட்டா, கல்லெடுத்து அடிப்பாரு.

பைத்தியம்னு பயப்படாம, இவர் கால்ல விழுந்து, ‘பெரிய சித்தர்..னு’ சொல்லுவாங்க.

‘பைரவா! உன்னால, எனக்கு மதிப்புடா’கிற மாதிரி பார்ப்பாரு. பொறை போடுவாரு.

பார்க்க வர்ரவங்க குறையச் சொல்லிக் கும்பிடும்போது, அவர் பூட்டை உலுக்கினா காரியம் கைகூடும்னு ஐதீகம்.

ஒரு மாசமா பெரியவரைக் காணும். உலகத்தை விட்டே போயிட்டாருன்னு சொல்லி, நாற்காலிக்கு மாலை போட்டாங்க.

அவர் எப்பவும் போடுற பொறையை, மேல டப்பாக்குள்ள இருக்கிற என் பெருச்சாளி நண்பனோட பகிர்ந்துப்பேன்.

வீட்டுக்குள்ள நிலத்துக்கடியில குடியிருக்க, அவன் சுரங்கம் தோண்டிகிட்டு இருக்கான்.

நேத்திக்கு திடீர்னு ஒரு மோதிரம் கொடுத்தான். தோன்டினபோது உள்ளுக்குள்ள நெறையா தங்கநகை பாத்தேன்..னான்.

பொறை போட்ட உங்கள பாத்தா, ரொம்ப வறுமையில இருக்கிற நல்லவராத் தெரியுது.

மோதிரத்தை அந்த நாற்காலி அடிலதான் வச்சிருக்கேன்.
எடுத்தாரேன்.

பக்கத்துல வந்தா ஏன் பயப்படுறீங்க?

நான் சொல்றது புரியலையா?

ஓடாடதீங்க.. ஓடாதீங்க!

2 Comments on “இந்திரநீலன் சுரேஷ்/பூட்டு சாமியார்”

  1. ஹா..ஹா.. பயப்படாம என்ன செய்யறது? படத்துக்கு ஏற்ற சிறந்த கற்பனை. அழகா எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள் சார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன