சுப்பிரதீபக் கவிராயர் பாடல்கள்

- விண்ணுலகம் ஆளச் சென்றாய்!
எண்திசைக்கும் புகழ்படைத்த குன்னரங்க
மகிபாலா! இனிமேல் இந்த
மண்தலத்துக்கு அரசாள ஒப்பிலா
நின்புதல்வன் மழவன்போதும்;
விண்தலத்துக்கு இந்திரனுக்கு அரசுநிலை
இல்லாமல் வெகுநா ளாக
நண்டு அளந்த நாழியாக் கிடக்குது; அந்த
விண்ணாள நடந்தி டாயே!
எட்டுத் திசைகளிலும் புகழ் கொண்ட குன்னரங்கன் என்பவனே! இனி இந்த உலகத்தை ஆட்சி செய்வதற்கு ஒப்பில்லாத உன் மகனான ‘மழவரங்கன்’ என்பவனே போதும், விண்ணுலகத்தில் இந்திரனுக்கு ஆட்சியானது நிலையற்று நீண்டகாலம் தகுதியில்லாதவர் ஆளும் ஆட்சி நிலவும் அந்தத் தேவர் உலகத்தினை ஆள்வதற்குச் செல்லலானாயோ?
