வி.வி. கலைச்செல்வி/மனசே மனசே


வழக்கமாக வருகிற குயில் தான்
வழக்கமாக கூவுகிற சத்தம் தான்
வழக்கமான அதே காலை நேரம்தான்
வழக்கமாக அமர்கிற அதே கருவேப்பிலை மரம் தான்

இன்றுமட்டும் குரலில் அத்தனை நெகிழ்வு
அத்தனை இனிமை
அத்தனை சுகம்

நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்
எல்லாம் மகிழ்ச்சியாகத் தெரிகிறது
மற்றபடி ஒன்றுமில்லை


தாராபுரம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன