
போன ஆண்டு அசோகமித்திரன் நினைவாக சிறுகதைப் போட்டி – 2025-ல் நடத்தினேன். இந்த ஆண்டு புதுமைப்பித்தன் பெயரில் சிறுகதைப் போட்டி நடத்துகிறேன்.
இந்தப் போட்டி 31.10.2026 அன்று முடிவடைகிறது.
போட்டியில் கலந்து கொள்பவர்கள் கவனத்திற்கு:
800 முதல் 1000 வார்த்தைகள் வரை கதைகள் எழுதப்பட வேண்டும்.
ஒருவர் ஒரு கதைதான் போட்டிக்கு அனுப்ப வேண்டும்.
சரித்திரக் கதையோ, துப்பறியும் கதையோ அனுப்பக் கூடாது.
கதையைத் தபாலில் அனுப்பக் கூடாது.
கதையை யூனிகோடில்
editor.navinavirutcham@gmail.com
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மொத்தம் 20 கதைகள் சிறப்புக் கதைகளாகத் தேர்ந்தெடுக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கதை ஒவ்வொன்றுக்கும் ₹500 பரிசு வழங்கப்படும்.
இந்தப் போட்டியில் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என்றெல்லாம் கிடையாது.
20 சிறப்புக் கதைகள் மட்டுமே உண்டு.
20 சிறப்புக் கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு புத்தகமாக வெளிவரும்.
இக்கதைகள் விருட்சம் இதழ்களிலும், டெய்லி விருட்சம் ஆன்லைன் இதழிலும் உடனுக்குடன் வெளிவரும்.
இதைத்தவிர, “தேர்ந்தெடுக்கப்படும் கதைகள்” என்ற பெயரில் தேர்ந்தெடுக்கப்படும் கதைகள் ஆன்லைன் பத்திரிகையிலும், புத்தகமாகவும் வெளிவரும்.
இந்த ஆண்டும் உங்கள் ஆதரவைக் கோரும்,
அன்பன்,
அழகியசிங்கர்
01.10.2026
