
கல்லூரி முடிந்து வேலைக்காக நகரத்துக்கு வந்திருந்தாள் ரேவதி. தினமும் மாலை, அலுவலகம் முடிந்ததும் அருகிலிருந்த பூங்கா பெஞ்சில் சிறிது நேரம் அமர்ந்து புத்தகம் படிப்பது அவளுடைய வழக்கம்.
அவள் அமரும் பெஞ்சின் அருகே ஒரு சிவப்பு நிறப் பறவை தினமும் வந்து அமரும்.
ஒருநாள் ரேவதி கையிலிருந்த பின்கட்டை அதற்குப் போட்டாள். மறுநாளும் வந்தது. இப்படியே இருவருக்கும் ஒரு பழக்கம் உருவானது.
ஒருநாள் பறவை வரவில்லை.
அடுத்த நாளும் வரவில்லை.
“என்ன ஆச்சு?” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே ரேவதி எழுந்தாள்.
அப்போது பெஞ்சின் கீழே ஒரு சிறிய கூடு இருப்பதைப் பார்த்தாள். அதற்குள் இரண்டு குஞ்சுகள் இருந்தன.
அருகிலிருந்த மரத்தடியில் ஒரு வயதான பெண் அமர்ந்திருந்தாள்.
“அந்தப் பறவையைத் தேடுறீங்களா?” என்று கேட்டாள்.
ரேவதி தலையசைத்தாள்.
“நேத்து ஒரு கார் அடிச்சுட்டுப் போச்சும்மா…”
ரேவதிக்கு மனது கனத்தது.
அந்தப் பெண் தொடர்ந்தாள்:
“ஆனா அது போகும் முன்னாடி இந்தக் கூட்டை நல்லா பாதுகாப்பான இடத்துல வச்சுட்டுப் போயிருக்கு.”
ரேவதி கூட்டைப் பார்த்தாள்.
அன்று முதல், , அவள் அது விட்டுச் சென்ற இரண்டு உயிர்களுக்காகத் தினமும் தவறாது அங்கே வரத் தொடங்கினாள்.
(வார்த்தைகள் 128)
