தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/சிவப்புக் குருவி

குருவியைக் கண்டதும் பதறினாள் ஷைனி. ‘இதென்ன ரத்த மயமால்லா இருக்கு’ எனப் படபடப்பாக பின்னால் எட்டிப் பார்த்தாள். சற்று தூரத்தில் ஒருவன் தரையில் ரத்த வெள்ளத்தில். கத்தி இதயத்துக்கருகில். கண்கள் வெறித்தன ஷைனிக்கு. நம்ம பின்னாடி கொலை முயற்சியே நடந்திருக்கு; நாம ரீல்ஸ் ஸெல்ஃபீன்னு இருந்திருக்கோமே எனத் தன்னையே கேள்வி கேட்டாள். உடனே நூற்றியெட்டுக்கு மொபைல் பண்ணிவிட்டு அந்த இடத்தை நோக்கி ஓடினாள். உயிர் துடித்துக் கொண்டிருந்தது. சில நிமிடங்களில் ஆஸ்பத்திரியில் அவன்.
இன்ஸ்பெக்டர் வந்தியத்தேவனும் ஸப் இன்ஸ்பெக்டர் குந்தவையும் குத்துப் பட்டவனை வெவ்வேறு கோணங்களில் பார்த்தனர். அவனது மொபைல் மூலமாக சில எண்களுக்கு அடித்தனர். அவனைப் பற்றிய விவரம் தெரிய வந்தது. மனைவிக்காரி அழுது புரண்டு வந்தாள். தக்க சமயத்தில் கொண்டு வந்ததற்கு ஷைனிக்கு மருத்துவர் நன்றி கூறினார். காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை அவரிடம். ஷைனியிடம் விசாரித்தார் வந்தியத்தேவன். அவள் மொபைலில் சில ஸெல்ஃபிகளைச் செக் பண்ணினார். கத்திக்காரன் ஸெல்ஃபில நின்றான். வேலை சுலபமாகியது இன்ஸ்பெக்டருக்கு.
குருவிக்குத்தான் நன்றி என நினைத்துக் கொண்டாள் ஷைனி!

116

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன