ஜி ஏ பிரபா/மறைப்பு

“ஆ” என்றாள் சுசி.
யாரோ இடுப்பைக் கிள்ளியது போல் இருந்தது.
பூங்காவில் அமர்ந்து ஆங்கில நாவலைநாவலைப படித்துக் கொண்டிருந்த சுசி திரும்பிப் பார்த்தாள். அருகில் உள்ள கல்லின் மீது ஒரு குருவிதான் அமர்ந்திருந்தது.
“என்ன பார்க்கிறாய்? நான்தான் கொத்தினேன்.”- குருவி பேசியது.
“அட நீ பேசுவியா!”
“ஆம்”
“எதற்காக என்னைக் கொத்தினாய்?”
“உன் இடுப்புப் பிரதேசம் திறந்த வெளியாக இருக்கிறது. அதனால் கொத்தினேன்”
“—–”
“இளம்பெண். அழகி. இப்படி அரைகுறை ஆடையோடு, பாதி உடலைக் காட்டிக் கொண்டு தனியாக அமர்ந்திருந்தால், யாருக்குமே கொத்திப் பார்க்க ஆசைதானே வரும்.”
“இதான் இப்போதைய ஃபேஷன்.”
“நாகரீகம் என்பது உடைகளில் இல்லை. கண்ணியமான நடத்தை, பேச்சில் இருக்கிறது.” பேசிய குருவியை வியப்போடு பார்த்தாள் சுசி.
“எங்களைப் போன்ற பறவைகளே சிறகுகளால் உடலை மூடிக் கொள்ளும்போது ஆறறிவு படைத்த நீங்கள் ஏன் இப்படிப் பாதி உடலைக் காட்டுகிறீர்கள்?”
“இது என் உரிமை”
“அது மற்றவர்களின் கிளர்ச்சியைத் தூண்டி விடாத வரையிலும்தான்”-குருவி.
“—–”
“ஆடையை அழகாக திருத்தி அணிந்து கொள். உரிமையை விட உன் பாதுகாப்பு முக்கியம்.” குருவி பறந்து சென்றது.
அதுஉதிர்த்து விட்டுச் சென்ற வார்த்தைகள் சுசியின் இடுப்பை மறைத்தது.
125 வார்த்தைகள்.



கோவை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன