
காஜல், அந்த பூங்காவின் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்.
அவளது கட்டழகான உடலும், சிகப்பு நிறத்தில் அமைந்த புதிய உடையும் பார்ப்பவர் கண்களை ஈர்த்தது. அப்படிப் பார்த்தவர்கள் அவளது முகத்தைப் பார்த்தபிறகு,
‘ப்ச்’ என்ற ஒலியுடன் பரிதாப உணர்ச்சியோடு முகத்தைத் திருப்பிக் கொள்வதை அவள் நன்றாகவே அறிந்தாள்.
அவளது அழகிய முகத்தில் திருஷ்டியாக நெற்றி முழுதும் கருப்பாக அமைந்து விட்டது, அவள் செய்த தவறு அல்லவே?
அந்த கருப்பு தேமலோடு தன்னை ஏன் பெற்றாய் என்று அவளது அன்னையிடம் அவள் அடிக்கடி சண்டை பிடிப்பாள்.
“கீகீ, கீகீ”
குரல் கேட்டுத் திரும்பினாள், காஜல்.
‘இங்கு ஒரு பச்சைக்கிளி, உடல் முழுதும் சிவப்பாக இருக்கிறதே? ஆனால் அது அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சந்தோசமாக இருக்கிறதே?’ எனச் சிந்தித்தாள்.
தன் உடலழகால் அல்ல, தன் திறமையால் மட்டுமே தான் இந்த உலகில் அறியப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.
101
