பாரதிராஜன் என்கிற ரங்கராஜன்/கிளியை பார்க்கும் பைங்கிளி!

 லீலா ஒரு கல்லூரி மாணவி பெற்றோர் ஐடி கம்பெனி ஊழியர்கள். எப்பாவுமே டென்ஷனுடன் தான் இருப்பார்கள். சனி,ஞாயிறு வந்தால் தான் நிம்மதியாக இருப்பார்கள். லீலா பள்ளிக்கூட நாட்களிலேயே பெற்றோரைத் தொந்தரவு செய்யாமல் இருக்க ஆரம்பித்தாள்.
அவளே படித்தாள் பெற்றோரைத் தொந்தரவு செய்யாமல் வீட்டில் இருந்த தோட்டத்தில் வந்து அமர்ந்து படிக்க ஆரம்பித்தாள்.

அந்த சமயத்தில் கீ கீ என்ற சத்தம் கேட்க ஒரு கிளி குஞ்சு நடக்க முடியாத நிலை. லீலா அதை எடுத்து கிண்ணத்தில் பாலை வைக்க முதலில் என்ன என்று தெரியாமல் பிறகு சாப்பிட ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் பால் குடித்து விட்டது.
கிளி லீலாவுடன் ஒட்டிக்கொள்ள ஆரம்பித்தது.
கிளி வளர வளர லீலா வும் வளர ஆரம்பித்தாள்.
பகல் முழுக்க வெளியில் சுதந்திரமாகச் சுற்றிவிட்டு மாலை லீலா வீட்டுத் தோட்டம்.
அன்றைய தினம் லீலாவுக்கு ஒரே டென்ஷன் அந்த சமயம் பார்த்து கிளியும் காணோம். மாலை 5 இந்த நேரத்துல ஆஜராக வேண்டிய கிளி ஏன் வரவில்லை என்ற படியே யோசிக்க ஒருவழியாக சுமாராக 6/௦௦ மணிக்குக் கிளி ஆஜர். அப்போது தான் லீலாவுக்கு உயிர் வந்தது. உடனே யோசித்தாள். இந்த கிளியை வண்டலூர் மிருக காட்சி சாலையில் கொடுக்கலாம் வெளியில் விட்டால் கிளி ஜோதிடர் கிளியை எடுத்துக் கொள்வான் என யோசித்து மறுநாள் காலை கிளி வண்டலூர் போனது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன