சுந்தர மணிவண்ணன்/ஊர்மிளா

ஒல்லியான உடல்.
உச்சரிப்பும் குரலும் ஸோ ஸ்வீட். எல்லோரையும் ஈர்க்கும் முகவமைப்பு.
எல்லாமே ஓகே.
அறிமுகமாகும் முயற்சியில்,
“ஒரு டயலாக் எழுதி குடிப்பா. டயலாக் டெலிவரி எப்படி இருக்குன பார்ப்போம்.”
“லெங்க்த்தியான டயலாக் தரட்டுங்களா சார்?”
“எதையாவது ஒன்னைக் குடுப்பா.”
சொல்லிவிட்டு அடுத்த ஷூட்டுக்கு அவசரமாகப் போனார் டைரக்டர்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்த அசிஸ்டென்ட் டைரக்டர்,
“சார்… மாடுலேஷன், உச்சரிப்பு எல்லாம் நல்லா வருது சார்.”
“மேக்கப் டெஸ்டுக்கு ரெடி பண்ணுங்க.”
“மேடம்… மேக்கப் டெஸ்ட் ஒன்னு எடுத்திடலாம்.”
மேக்கப் முடிந்ததும்,
“கச்சிதமா இருக்காங்க சார். நாளைக்கு அந்த சீன்ல எப்படி பண்றாங்கன்னு பார்த்திடலாம்.”
“நாளைக்கு காலைல நம்ம ஸ்டூடியோவோட நாலாவது ஃப்ளோருக்கு வந்துடச் சொல்லுங்க.”
“காலையில் வந்ததும்… நான் மட்டுமா? கூட யாராவது நடிக்கிறாங்களா?”
“அது சர்ப்ரைஸ்.”
ஆச்சரியத்துடன் பார்த்தாள் ஊர்மிளா.
மறுநாள்.
கேமரா ரெடி.
ஊர்மிளா சோஃபாவில் அமர்ந்திருந்தாள்.
“டயலாக் என்ன சார்?”
“வெயிட்… வெயிட்… ஹீரோ உங்களைப் பின்னாலிருந்து அழைப்பார்.”
கேமராவின் வெளிச்சத்தில்.
“ஊர்மிளா…”
பின்னாலிருந்து குரல்.
திரும்பிப் பார்த்தாள்.
சிவப்புக் கிளி.
“சூப்பர்!”
டைரக்டர் கைதட்டினார்.
“ஷாட் ஓகே… கட்!”
கிளி மீண்டும் சொன்னது:
“மை டார்லிங்!”

(127 words)

One Comment on “சுந்தர மணிவண்ணன்/ஊர்மிளா”

  1. அசத்தல் கற்பனை. அழகா வந்திருக்கு. படத்துக்குப் பொருத்தமாகவும் இருக்கு. வாழ்த்துகள் சார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன