சுபாஷிணி ரமணன்/புது வரவு

 “அம்மா, அம்மா”

“ஏண்டா வாசல்ல நின்னு கத்திக்கொண்டே நிக்கலேன்னா, உள்ள வர வேண்டியதுதானே! பாத்திரம் தேய்த்து கொண்டிருந்த வள்ளி, புடவையில் கையை துடைத்தவாறே, குடிசைக்கு வெளியில் வந்தாள். பார்த்ததும் தூக்குவாரி போட்டது அவளுக்கு.
கைக்குழந்தை ஒன்றைத் தோளில் சாய்த்தபடி ராஜா நின்று கொண்டிருந்தான்.
“டேய் என்னடா இது? குழந்தையை தூக்கிட்டு வந்து நிக்குற? யாரோட குழந்தை இது?” வள்ளி பதட்டத்துடன் குழந்தையைக் கையில் வாங்கினாள்.
“குழந்தையைக் கண்டபடி தூக்கக் கூடாது. உரம் விழுந்திடும்.” என்று கேட்டுக் கொண்டே குழந்தையின் முகத்தைப் பார்த்தாள். அழகான பெண்குழந்தை. “யாரோட குழந்தைடா?” என்றாள் மறுபடியும்.
“தெரியலம்மா, அதோ! அந்தக் குப்பைத்தொட்டிகொண்ட சாக்குப் பைல சுத்தி கிடந்துச்சு. இரண்டு, மூணு தெருநாய்ங்க பையை இழுத்துட்டு இருந்துச்சுங்க. அலறச் சத்தம் கேட்கவும் நாய்ங்கள வெரட்டிட்டுப் பார்த்தேன். அழுதுட்டு இருந்த பாப்பா சிரிச்சுது. பாவமா இருதுச்சு. தூக்கியாந்துட்டேன். அம்மா, நாமளே வளக்கலாம்மா” என்றான் கண்களில் ஆசை பொங்க.
ஒருநிமிடம் யோசித்தவள், “வளக்கலாண்டா, என்ன பேரு வைக்கலாம்?” என்றாள்.
“ராணி”
“அரண்மனை தான் இல்ல. ராஜாவும், ராணியுமாவது இருங்க” என்று வள்ளி சிரித்தாள்.

119

One Comment on “சுபாஷிணி ரமணன்/புது வரவு”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன