தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/ இடர் வரினும்

காலங்காலத்தாலே ரெண்டு பசங்களுக்கும் கஞ்சியும், முதல்நாள் வச்ச மீன் குழம்பில் மீதி இருந்ததைச் சூடு பண்ணி வச்சிட்டும், வயக்காட்டு கூலி வேலைகளுக்குக் கிளம்பினர் வள்ளியும் முருகனும். இருவரும் வேலைகளை முடித்து நாலு மணிக்கு மேல்தான் வீட்டுக்கு வரமுடியும். மூத்தவன் கதிரவனோ பேசும் திறன் இழந்தவன். காதும் கேட்காது. ஆனால் புத்திசாலி.
இரு சிறுவர்களும் வீட்டு முன்னால் மணலில் விளையாட்டு கொண்டு, இடையிடையே கஞ்சியையும் மீன்குழம்பையும் புசித்துக் கொண்டனர். அப்பப்ப பக்கத்து வீட்டுப் பசங்களுடன் ஓடிப்பிடிச்சு, கள்ளன் போலிஸ் என விளையாட்டுகள். பதினொரு மணியளவில் மீண்டும் குழந்தை தூங்கப் போய்விட்டது. தரையில் அம்மாவின் பழைய சேலை விரிப்பிலே, அம்மா நினைப்பிலேயே நல்ல சுகமான தூக்கம்.
திடீரென சிறிதளவு நில அதிர்வு. இவர்களது குடிசையில் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தே விட்டது. பதறிப் போய் உள்ளே ஓடிப்போன கதிரவன் தனது அன்புத் தம்பியை மார்புடன் தழுவிக்கொண்டு வீதிக்கு ஓடி வந்துவிட்டான். பக்கத்து வீட்டினர் இருவரையும் ஊர் மக்கள் கூடியிருந்த கோவில் முன்னாடி கூட்டிச் சென்றனர். பதறிப் போய் ஓடி வந்த வள்ளியும் முருகனும் தங்கள் பிள்ளைகளுக்கு ஒன்னும் ஆகல என சந்தோஷப்பட்டார்கள்.

(127 வார்த்தைகள்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன