சாய் செந்தில்/ஒரு துளி பால்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திரு சாய் செந்தில் எழுதிய “ஒரு துளி பால் என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு –

“என்ன லாரன்ஸ், ஆட்டோ ஸ்டாண்டே வெறிச்சோடி கிடக்குது?” ஆட்டோவை ஓரம் கட்டிக் கொண்டே லாரன்ஸைப் பார்த்து கபாலி கேட்டான்.

“என்ன மாமு, நியூஸே தெரியாதா உன்க்கு? நைட் ஃபுல்லா அடிச்சிட்டு மட்டையாயிட்டியா?” என்று கேட்டான் லாரன்ஸ்.

“ஆமாண்டா… ஏன்… என்ன ஆச்சு…?” என்று கேட்டான் கபாலி.

“யாரோ, என்னவோ தலீவருன்னான்க… பூட்டாராம்… நமக்கு யாரைத் தெரியுது… வர வழியில் பார்த்திருப்ப இல்ல…? அல்லா கடையும் மூடிட்டாங்க… அதான் நம்ம ஆளுங்களும் ஆட்டோவெல்லாம் எடுத்துட்டு வீட்டுக்கு பூட்டாங்க. நான் கிளம்புற நேரத்துல நீ வந்துட்ட. சரி மாமு நீயும் கிளம்பு. நானும் கிளம்புறேன்…,” என்று சொல்லிக் கொண்டே வண்டியை கிளப்பினான் லாரன்ஸ்.

“சரிடா, நானும் கெளம்புறேன். போற வழியில கால் கிலோ கறி எடுத்துட்டு போனா, உங்க அக்காளை சமைக்க சொல்லிட்டு, நேத்து சரக்குல மிச்சம் கொஞ்சம் கீது. அத உள்ள விட்டுகிட்டு தூங்க வேண்டியதுதான்,” என்று சொல்லிக் கொண்டே ஆட்டோவை கிளப்பினான் கபாலி.

அவன் பாட்டுக்கும் போகட்டும், அதுக்குள்ள அவனைப் பற்றி நம பார்க்கலாம். நல்ல உயரம், வாட்ட சாட்டமான உடம்பு. பார்த்தாலே முரடன் என்பது சொல்லாமலே தெரியும். எல்லா வகையான கெட்டப் பழக்கமும் உண்டு. அவனை எதிர்த்து யாரும் பேச முடியாது. கையை ஓங்கிடுவான். அந்த ஆட்டோ ஸ்டாண்ட்ல அவன் வைத்தது தான் சட்டம். அவன் ஏரியால, அவன் தான் தாதா.

“தம்பி, வண்டியை கொஞ்சம் நிறுத்துப்பா…,” ஆட்டோவை மறித்தாள் லட்சுமி பாட்டி.

“ஏய் கிழவி, அப்பால நகரு… ஏன் வண்டியை மறிக்கிற…?” என்று கோபமாக கேட்டான் கபாலி.

“எப்பா, பஸ் வண்டினு எதுவுமே கிடைக்கல. என் பேத்திய ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகணும். நிறைமாச கர்பிணி. தலைப்பிரசவம்… அம்மா இல்லாத புள்ள. கொஞ்சம் கருணை காட்டப்பா. உனக்கு புண்ணியமா போகும்,” என்று பதட்டத்தில் வார்த்தைகளைக் கொட்டினாள் லட்சுமி பாட்டி.

“இப்ப எந்த வண்டியும் போகாது கெயவி. ஊரே களேபரமா கீது. நீ என்னான்னா, ‘இங்கப்போ, அங்கப்போ’னு சொல்லிகீனு கீற…” என்ற கபாலியின் கண் முன்னே மிச்சம் மீதி சரக்கு இருந்த, சரக்கு பாட்டில் தோன்றி மறைந்தது.

“உன் தங்கச்சியா நினைச்சு இந்த ஹெல்ப்பை பண்ணுப்பா…,” என்று கெஞ்சினாள் லட்சுமி பாட்டி.

ரோட்டாரம், பிளாட்பார்மில் இடுப்பை பிடித்துக் கொண்டு துடித்துக் கொண்டிருந்தாள் துளசி. ஏனோ அந்த காட்சியை பார்த்த கபாலிக்கு மனசு என்னவோ பண்ற மாதிரி இருந்தது.

“சரி கெயவி… அந்த புள்ளையை ஆட்டோல ஏறி குந்த சொல்லு. ஆனா யாராச்சும் வழி மறிச்சா, அப்பால அங்கே இறக்கிவிட்டுட்டு போயிடுவேன். சரிதான்னா, வண்டியில் ஏறு…,” என்று கறாரா பேசினான் கபாலி.

“சரிப்பா, ஏழு, ஏழு ஜென்மத்துக்கும் உன்னை மறக்க மாட்டோம்…,” என்றாள் லட்சுமி பாட்டி.

வண்டியை ஸ்டார்ட் செய்து, குறுகலான சந்துகளின் வழியே பயணித்து, மெயின் ரோடை அடைந்தான் கபாலி. மெயின் ரோட்டில் 50 மீட்டர் கூட போயிருக்க மாட்டான், அதுக்குள்ளே ஒரு கும்பல், தூரத்தில் கலவரத்துக்கு தேவையான அத்தனை ஆயுதங்களையும் எடுத்து கொண்டு வந்தனர். உடனே பக்கத்தில் தெரிந்த சந்துக்குள் ஆட்டோவை விட்டான். கொஞ்ச தூரம் அந்த சந்தில் ஓட்டிவிட்டு, மீண்டும் மெயின் ரோட்டிற்கு வரும் போது, அந்தக் கும்பல் கடந்து போயிருந்தது. மெயின் ரோட்டில் ஆட்டோவை ஓட்டிக் கொண்டிருந்தான்.

நேரம் ஆக, ஆக அந்தப் பெண்ணின் குரல் அதிகரித்துக் கொண்டே இருந்தது, வலியைப் பொறுக்க முடியாமல். அதற்குள் மீண்டும் ஒரு கும்பல், ஒரு சந்தில் இருந்து வந்தது. ஆட்டோவை மறித்தனர். அந்த கும்பலில் இருந்த ஒருத்தன், தன் கையிலிருந்த உருட்டுக் கட்டையை ஆட்டோ கண்ணாடியை அடிக்க ஓங்கினான். அதற்குள் இன்னொருவன், “நிறுத்துடா… அது நம்ம கபாலிடா…,” என்றான்.

கபாலியும் ஆட்டோவை நிறுத்திவிட்டு, வண்டியிலிருந்து இறங்கினான். அவனைப் பார்த்ததும், அவனை அடையாளம் கண்டுகொண்ட கும்பல், பின்னால் ஜகா வாங்கியது.

மீண்டும் ஆட்டோவுக்குள் ஏறிய கபாலி, ஆட்டோவை விரட்ட ஆரம்பித்தான். மிக விரைவாக அவன் ஆட்டோ ஆஸ்பிட்டலை வந்தடைந்தது. கபாலி, பாட்டியுடன் சேர்ந்து துளசியை ஆட்டோவிலிருந்து இறக்கி, ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்தான்.

பாட்டி, எட்டாக மடித்து தன் புடவைத் தலைப்பில் வைத்திருந்த நூறு ரூபாய் நோட்டை கபாலியிடம் கொடுத்து, “ராசா, நீ செய்த உதவிக்கு கோடி கோடியா கொடுத்தாலும் பத்தாதுய்யா… ஆனா, இந்த ஏழைக் கிழவியால முடிந்தது இவ்வளவு தான். என் தலைமுறையை காப்பாத்தி கொடுத்த நீ, பொண்டாட்டி, புள்ளைகளோட மகராசனா வாழுனுய்யா…,” என்று கூறிக் கொண்ட, தன் கைகளை உயர்த்தி கும்பிட்டாள்.

“இல்ல கெயவி, அந்தப் புள்ளைய எனக்கு தங்கச்சினு வேற சொல்லிட்ட. அப்பால ரூபா வாங்க்கக் கூடாது. இந்தா இதையும் சேர்த்து ஆஸ்பத்திரி செலவுக்கு வச்சிக்கோ…,” என்று சொல்லிக் கொண்டே தன் பாக்கெட்டிலிருந்து எடுத்த ஐந்நூறு ரூபாயையும் சேர்த்துக் கொடுத்தான் கபாலி.

ஸ்ட்ரெச்சரில் இருந்த துளசியும் கபாலியைப் பார்த்துக் கும்பிட்டாள். கண்களில் கண்ணீர் வழிந்தது, பாட்டிக்கும் பேத்திக்கும். அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

‘நானா இப்படி நடந்து கொண்டேன்’ என்று தனக்குள் கேட்டுக் கொண்ட கபாலி, அவனை நினைத்து, அவனே வியந்து கொண்டான். அவன் வாழ்நாளில் இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. உடம்பெல்லாம் என்னவோ செய்வது போன்ற உணர்வு. ‘அட, இது கூட நன்றாகத்தான் இருக்கிறது’ என சொல்லிக் கொண்டான்.

‘ஒரு குடம் விஷத்தில் விழுந்த ஒரு துளி பால், அந்த விஷத்தையே பாலாக மாற்றிக் கொண்டிருந்தது.’

சாய் செந்தில்

திரு செந்தில்வேலன். சாய் செந்தில் என்கின்ற புனைப்பெயரில், சிறுகதைகள், நகைச்சுவைத் துணுக்குகள் எழுதி வருகிறார். கடந்த 34 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர் 5 ஆண்டுகள் பூட்டான் நாட்டிலும், 3 ஆண்டுகள் ஆபிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள எரித்ரியா நாட்டிலும் விரிவுரையாளராக பணியாற்றி உள்ளார் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதுப்பட்டு அரசு மேல் நிலைப் பள்ளியில் முதுகலை இயற்பியல் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

கல்லூரி நாட்களில், கல்கி போன்ற இதழ்களில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு சிறு, சிறு பரிசுகளைப் பெற்றுள்ள இவர் தற்போது 40க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 20க்கும் மேற்பட்ட நகைச்சுவை துணுக்குகளும் எழுதி, அவை பத்திரிக்கைகளில் பிரசுரம் ஆகியுள்ளன.

மாலை மலர் நடத்திய சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு, ஆனந்தசந்திரிகை பத்திரிக்கை நடத்திய போட்டியில் சிறப்புப் பரிசு மற்றும் அனிச்சம் மின் இதழ் நடத்திய போட்டியில் சிறப்புப் பரிசு ஆகியவை பெற்றுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன