வி.கே.லக்ஷ்மிநாராயணன்/முத்தான முத்து

தம்பி இளவரசுவை ஜாக்கிரதையாகப்
பார்த்துக் கொள்ளும்படி முத்துவிடம்
கூறிவிட்டு சித்தாள் வேலைக்குப் புறப்
பட்டுச் சென்றாள் ஜக்கம்மா. கணவன்
யாரையோ இழுத்துக் கொண்டு ஓடிய
தால் தான் வேலைக்குச் செல்ல வேண்
டிய நிலைமை. அன்று பள்ளி விடுமுறை
யானதால் முத்து வீட்டில் இருந்தான்.
சிறிது நேரம் கழிந்தது. தம்பி சுருண்டு
சுருண்டு படுப்பதைக் கண்டு அவனைத்
தொட்டுப்பார்த்தான் முத்து. உடம்பு நெருப்பாக கொதித்தது. அதிச்சியு ற்றவன் உடனே தம்பி யைத் தூக்கிக்கொண்டு ஆரம்ப சுகா தார நிலையத்துக்கு ஓடினான். அங்கு செவிலித் தாயாக வேலை பார்க்கும் ராணிக்குஜக்கம்மா குடும்பத்தை பற்றி தெரியும். பதற்றத்துடன் வந்த முத்துவிட
மிருந்து துவண்டு போயிருத்த இளவரசு
வை வாங்கிக் கொண்டு முத்துவுடன்
மருத்துவர் அறைக்குள் நுழைந்தாள்
ராணி. மருத்துவர் பரிசோதித்துவிட்டு
ஊசி போட்டார். பிறகு இரண்டு மாத்தி
ரன்களை கொடுத்து பொடியாக்கி தே
னில் கலந்து இரண்டு வேளை தரும்படி கூறினார்.
செட்டியார் கடையில் பன்னும், தேன்
பாட்டில் ஒன்றும் வாங்கிக் கொண்டு
தம்பியுடன் வீடு வந்து சேர்ந்தான் முத்து. கொஞ்ச நேரத்தில் காய்ச்சல்
குறைந்தது. முத்து நிம்மதியாக மூச்சு
விட்டான்.

124

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன