வி.கே. லக்ஷ்மிநாராயணன்/செல்வியின் ஆசை

ஐந்தாம் வகுப்பு படிக்கும் செல்விக்கு பத்து வயதாகிறது. திடீரென ஒருநாள் அவளுக்குச் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ளும் ஆசை ஏற்பட்டது. தந்தை ஏகாம்பரத்திடம் தன் ஆசையைக் கூறினாள். ஆனால், அவனோ, “இன்னும் இரண்டு வயது போகட்டும்; பிறகு பார்க்கலாம்” என்று சொல்ல, செல்விக்கு ஏமாற்றத்தால் முகம் சுண்டிப்போனது.
செல்வியின் தோழிகள் பலர் சைக்கிளில் வருகின்றனர். அதைப் பார்த்துச் செல்விக்கும் தான் சைக்கிளில் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்ற ஆசை தோன்றியது நியாயமே!
அன்று காலை கண் விழித்த ஏகாம்பரம், “ஏ புள்ளே செல்வி!” என உரத்த குரலில் அழைக்க, உடனடியாக ஓடிவந்தாள் செல்வி. தந்தை படுத்திருந்த கட்டிலருகில் வந்து நின்றாள்.
“என்னப்பா?” எனக் கேட்டாள்.
“செல்வி, அதிகாலையில் ஒரு கனவு. கனவுல நீ குரங்குப் பெடல் போட்டு சைக்கிள் ஓட்டுற மாதிரி… தெரிஞ்சுது. ஆச்சரியம் என்னன்னா, இப்ப மாதிரி அப்பவும் நீ கத்திரிப்பூ கலர் பாவாடையும் பச்சை கலர் சட்டையும் போட்டிருந்தே!” என்றான்.
‘ஆஹா, அதிகாலையில் கண்ட கனவு பலிக்கும்’ என மனதில் மகிழ்ந்தாள் செல்வி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன