லிண்டா பாஸ்டன்/ வழிமுறை

தமிழில்: க.மோகனரங்கன்

உங்கள் வலியை
கைகளில் ஏந்தி,
அது உறங்கும் வரை
மெல்லத் தாலாட்டுங்கள்;
பிறகு இருண்ட அறையில்
அதை கிடத்திவிட்டு,
அடிமேல் அடி வைத்து
மெதுவாக வெளியேறுங்கள்.
ஒரு கணத்திற்கு
நிம்மதி தரும் வெறுமையை
நீங்கள் உணர்வீர்கள்.
ஆனால், அடுத்த அறையிலோ
உங்கள் வலி ஏற்கனவே
விழித்துக்கொண்டுவிட்டது.
விரைவில் அது உங்களை
பெயர் சொல்லி அழைக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன