
மீனா ஆறாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி. அந்தக் கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரைதான் பள்ளிக்கூடம் உள்ளது. ஒன்பதாம் வகுப்பு படிக்க, இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடுத்த கிராமத்திற்குச் செல்ல வேண்டும்.
இந்தக் கிராமத்தில் மழை பொய்த்துவிட்டது. இருந்தாலும், மக்கள் ஓரளவு சமாளித்தனர். மீனாவின் அப்பாவும் அப்படித்தான்.
மீனா படிப்பில் சுட்டி. யார் உதவியும் இன்றி சைக்கிள் ஓட்டக் கற்க ஆரம்பித்தாள். கீழே விழுந்து கை, கால்களில் சிராய்ப்புகள் ஏற்பட்டாலும், விடாமல் கற்றுக்கொண்டு சிங்கப் பெண்ணானாள்.
அதன் பிறகு, தன் தோழிகளுக்கே சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தாள். மீனாவின் தந்தை வங்கிக் கடன் மூலம் நிறைய சைக்கிள்களை வாங்கி, மாணவர்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள உதவி செய்தார்.
