இசைக்கலைஞன் காட்டுவழியாகப் பய
ணம் செய்கிறான்.களைப்பு.சோற்று மூட்
டையை ஒரு மூங்கிலில் கட்டிவிட்டு பரவ
சத்தோடு ஆகிரி ராகத்தை நேரம் போவ
து தெரியாமல் பாடிக் கொண்டிருக்கிறா
ன்.மாலை வந்துவிடுகிறது.நல்ல பசி.
சோற்றுமூட்டையை எடுக்கப் போகிறான்.
கஷ்டகாலம்.வெயில் ஏற ஏற மூங்கில்
நிமிர்ந்து சோற்றுமுட்டை உச்சிக்குப் போ
ய்விடுகிறது.கொலைப் பசியில் துவண்டு
போகிறான்.சோற்றுக்கு லாட்டரி.பெரும்
பழி ‘ஆகிரி’ராகத்தின்மேல் விழுந்து விடு
கிறது.ஆகிரி பாடினால் சோறு கிடைக்கா
து என்ற கதைவந்துவிட வித்வான்கள்
ஆகிரிபக்கமே போகப் பயந்தனர்.இப்போ
தான நிலைமையறியேன்.
ஆகிரியில் ஏகப்பட்ட சிக்கல்.எளிதில் வச
ப்படாது.வகுளாபரணத்தின் ஜன்யம் என
வும்,சூர்யகாந்தத்தின் ஜன்யம் எனவும்,
இல்லை தோடியின் ஜன்யம் எனவும் மரு
ட்டல் விவகாரம் வந்துவிட்டது.இன்னும்
சிலர் பைரவியின் குழந்தையெனவும்
குழப்புவர்.வக்ரபாஷாங்க ராகம்.ரிஷபம்,
காந்தாரம்,தைவதம்,நிஷாதம் என எல்லா
சுரங்களும் பெரிசாயும் சிறிசாயும் வந்து
அமர்க்களப்படுத்துவது இம்சை.கரணம்
தப்பினால் மரணம்மாதிரிதான்.வழிதவ
றிப்போய் முடிக்க முடியாமல் முழிபிதுங்
கிப்போய் தடுமாறவைக்கும்.
சரியான குருவிடம் சரியான சிஷ்யனாக
இருந்து சரியான சிட்சை செய்யவேணும்.
ரொம்பவே கடுமையான பாடாந்தரம்.
எதற்கு இந்த இம்சையென்று பாடகர்கள்
கச்சேரியில் ஆகிரிப்பக்கம் போய் வம்பு
வாங்கிக் கொள்வதில்லை.சிரமமான
பயிற்சியில் தான் ஆகிரி வசப்படும்.நம்ம
கலைமாமணிகள்,கல்யாணி காம்போஜி
சிந்து பைரவி என மூணுபாடிவிட்டு துக்
கடாவாக பாபநாசம் சிவன்,பாரதியார் ஊத்துக்காடு,கோபாலகிருஷ்ணபாரதி
என ரெண்டொன்று எடுத்து ஒப்பேற்றி
விட்டு மேடையை விட்டு இறங்கி விடுவது
வழக்கம்.
எடுல காப்பாடூதுவோ’ தியாகராஜர்,’குஸ
மாகா’தீக்ஷதர் என அபூர்வமாய்த்தான்
ஆகிரியில் கிடைக்கிறது.யார் இவற்றில்
துணிவார்?
“”””
