வளவ. துரையன்/கச்சேரி ஆரம்பம்

சரியாக நள்ளிரவு
பன்னிரண்டரைக்க்குதான்
நாய்களின் கச்சேரி ஆரம்பம்;

முதலில் ஒன்று தொடக்கவுரை
பிறகு வாழ்த்துரை
அடுத்து கருத்துரை என
தொடர்கதைதான்;

இரண்டாவது வீட்டில்
வளர்க்கும் இளம்பருவப்
பெண்குட்டியே காரணம்;

எல்லாம் ஒன்று சேர்ந்ததும்
தினம் ஒரு காரணம்;

கருப்பு உடையணிந்து
செல்லும் காவல்காரன்
கழியைத்தட்டிக்கொண்டு செல்லும்
காலொடிந்த தாத்தா
பக்கத்துத் தெருவிலிருந்து வந்த
பழுப்பு நிற நாய்;

கடைசியில் ஒரு நாள்
நாய்வண்டி வந்து
எல்லாம் போய்விட்டன;

மறுநாள்
ஆனாலும் கச்சேரி இல்லை
தூக்கமும் வரவில்லை

—

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன