சுந்தர மணிவண்ணன்/அம்பாளே துணை வந்தாள்

கொலுவுக்கு அவள் அழைத்திருந்தாள். ஏதோ ஒன்று மாற்றி ஒன்று என ஒரு வேலையாக இருந்தது. நேரமே இல்லாமல் போய்விட்டது.
இன்று கடைசி நாள். ஒரு எட்டு போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று கிளம்பினேன்.
வெளியில் வந்து பார்த்தால், மேகம் கருத்து, வேகமாக மழை பெய்துகொண்டிருந்தது.
இதைக் காரணமாகச் சொல்லிப் போகாமல் இருக்க முடியாது. அப்போது வெளியே ஆட்டோக்காரனின் ஹாரன் சத்தம் கேட்டது.
ஆட்டோவில் ஏறினேன். அடைமழை ஆரம்பமானது. இரண்டு தெருக்கள் தாண்டியதும் தெருவெல்லாம் ஆறாக மாறியது. ஆட்டோ நிலைதடுமாறி எதிரில் இருந்த பள்ளத்தில் இறங்கியது.
“அம்மா!” ஆட்டோக்காரன் கையெடுத்துக் கும்பிட்டான்.
“ஆட்டோவுக்குள் தண்ணீர் ஏறிவிட்டது. வண்டி கிளம்பாது. வேறு வண்டி பிடித்துப் போயிடுங்கம்மா!”
வெளியில் தூறல். மழை விட்டபாடில்லை.
என்ன செய்வது என்ற பயத்தில்,
“அம்மா பராசக்தியே! உன்னுடைய விழா நவராத்திரி. உன்னைப் பூஜிக்க வந்த என்னைக் கைவிடலாமா?” என்று உள்ளம் உருக வேண்டிக்கொண்டேன். பத்து கைகள் கொண்ட அந்தப் பராசக்தியை, ஒரு கை கொண்டு உதவிக்கு அழைத்தேன்.
பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது.
“உமா, இங்கே என்ன பண்ற?”
ஆட்டோவில் இருந்தவள் என்னை அழைத்தாள்.
“உங்க ஆத்து கொலுவுக்குத்தான் வந்துட்டிருக்கேன். நல்ல காலம், அந்த அம்பாளே உன்னை இங்கே அனுப்பிச்சிட்டாள்!”

One Comment on “சுந்தர மணிவண்ணன்/அம்பாளே துணை வந்தாள்”

  1. பல பேருக்கு இந்த மாதிரி நடந்திருக்கு. அந்த அனுபவத்தை அழகான கதையா மாத்திட்டீங்க. வாழ்த்துகள் சார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன