வளர்கவி/அம்மன் லீலையா? ஏஐ வேலையா?

வழிவழியாகச் செய்து வந்த துர்கா பூஜையை நிறுத்திவிட நினைத்தாள் நித்யா.

காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. ஏஐ தயாரிப்பில் ஒரு அம்மன் படத்தை வரைந்து வாட்ஸ்அப்பில் அனுப்பிய பிரகஸ்பதி, அடிச்செய்தியாக ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார்.

“இதை அப்படியே பத்து பேருக்கு ஃபார்வர்டு செய்யுங்கள். இன்னைக்கே அம்மன் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டுவாள். தவறினால், நான் பொறுப்பல்ல!”

மிரட்டலுக்குப் பயந்திருந்தபோது கதவு தட்டப்பட்டது.

திறந்தால், பக்கத்து வீட்டு பங்கஜம் படபடப்பாக, “கொஞ்சம் சீக்கிரம் வாங்க! கொல்லையில் பாம்பு!” என்றாள்.

அது…

பாம்பா? அம்மனா?

பத்து பேருக்குப் படத்தை அனுப்பும் முன்பே, படம் எடுக்கும் பாம்பாக அம்மன்…

உதவ ஓடித் தேடினால், கண்ணில் பாம்பு அகப்படவில்லை. சரி, படத்தைப் பத்து பேருக்கு அனுப்பலாம் என்று தேடினால், மெசேஜ் டிஸ்அப்பியர்டு!

அம்மன் லீலையா? ஏஐ வேலையா?

—

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன