அதிரன்/பார்வை

சுருள் கதவை
சுற்றுக்கோலால்
சுழற்றிச் சுழற்றி
உயர்த்தும்
பணிப்பெண்ணின்
புடைத்த பிட்டத்தை
வெறித்துப் பார்க்கின்றன
பூட்டிய எதிர்க்கடையின்
வாயிலில்
கால் மேல் கால் போட்டு
அமர்ந்திருக்கும்
சுருங்கிய தோலுக்குள்
சிவந்த
பீளை படிந்த
ஒரு ஜோடி விழிகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன