விஜயலக்ஷ்மி கண்ணன் /இன்று போல் என்றும்…

ஆடுவோம் கொண்டாடுவோம்
இந்நாளை
தீபத்திருநாளை

இருளை விரட்டுவோம்
மருளை நீக்கிடுவோம்

மத்தாப்பு சிரிப்பு
முத்தான பூரிப்பு

பிள்ளைகள் கண்களில்
கண்டு மகிழ்வோம்

படபட வெடிக்கும்
சிவகாசி பட்டாசு

தரையில் சக்கரம்

மனதுக்குள் பறக்கும்
பட்டாம்பூச்சி

நினைவுகள்
எட்டாத தூரம்
எட்டி பார்க்க துடிக்கும்

அத்தையும் மாமனும்
தாத்தனும் பாட்டியும்

ஒன்றுகூடி
குலாவி
உள்ளம் குளிர

உண்ட விதம்
இந்நாளில் நினைவில் மட்டுமே!

புஸ்வாணம் போல் மறைந்தாலும்
புகை வரும் தொடர.

இனிது இனிது
எல்லாம் இனிது
இன்றும் என்றும்
உள்ளத்தில் தீபம்
ஒளியை பரப்பட்டும்.

08.11.2026

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன