எஸ். பாலாஜி/தூரத்து வெடி முழக்கம்

“நாம எங்கே போறோம்?” என்று குழுவில் கடைசியாக வந்த சிறுவன் கேட்டான்.
“அரசாங்கம் ஏற்பாடு செஞ்சிருக்கிற பாதுகாப்பான தங்குமிடத்துக்கு. நம்ம பொழப்பையும், அம்மா அப்பாவையும் இழந்துட்டோம் இல்ல… அதனால நம்மள அங்கே கூட்டிட்டுப் போறாங்க” என்றாள் ஒரு சிறுமி.
“சரி, அங்கே என்ன கிடைக்கும்?”
“துணி கிடைக்கும்” என்றாள் மற்றொருத்தி.
“சாப்பாடு?”
“அவ்வப்போ கிடைக்கும்.”
“எவ்வளவு நாள் அங்கே இருக்கலாம்?”
“போர் முடியிற வரைக்கும்.”
“எப்போ முடியும்?”
“ஒரு மாசத்துக்குள்ள முடிஞ்சிடும்னு சொல்றாங்க.”
சிறுவன் கொஞ்ச நேரம் அமைதியாக நடந்தான்.
பிறகு, “ஏன் இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சிடணும்? இன்னும் கொஞ்சம் நீட்டிச்சா நல்லா இருக்கும்ல?” என்றான்.
அவனுடைய கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.
அவர்கள் நடந்து கொண்டிருந்த பாதையில், இன்னும் தூரத்தில் குண்டுவெடிப்பின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன