வைஜயந்தி விஸ்வநாதன்/பிரிந்தவர் கூடினால் பேசவும் தோன்றுமோ?

வரைந்த ஓவியத்தை மீண்டும் மீண்டும் பார்த்தான். சரியாகப் பார்க்க முடியாதபடி கண்களில் நீர் திரையிட்டது.

ஓடி வந்த மகள் ராதா, “எத்தனை அழகாக இருக்கிறது, அப்பா! இதை நான் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் போடவா?” என்றாள்.

நல்ல விஷயம்தான் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான் ராமு. இதைப் பார்த்துவிட்டு என் நண்பர்கள் எனக்குக் கிடைப்பார்களா? எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன இவர்களைப் பிரிந்து! எனக்கு ஒரு நல்ல குடும்பம் கிடைத்தது. இவர்களுக்கும் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

மிக்க சந்தோஷத்துடன், “போடுமா. ஆனால் ஒரு விஷயம்… அதில் என் பெயரையும் என் கைப்பேசி எண்ணையும் கொடுத்துவிடுகிறாயா?” என்றான்.

“எதற்காக, அப்பா?”

“நான் வாழ்க்கையில் ஒன்றைத் தேடிக்கொண்டே இருக்கிறேன், மகளே. எனக்குக் கிடைக்க வேண்டும் என்ற ஆசையால்!”

“சரி, அப்பா” என்றாள் ராதா.

நாட்கள் ஓடின. தினமும் அந்த ஓவியத்தைப் பார்க்கும்பொழுது, இறைவனிடம் வேண்டுவதுபோல, “உங்களை நான் மீண்டும் சந்திக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே இருப்பேன்.

என் ஆழ்மனதின் ஆசை அந்த ஆண்டவனுக்குப் புரிந்ததோ என்னவோ! திடீரென்று ஒரு நாள் எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.

“நீங்கள்தான் இந்தப் படத்தை வரைந்த ஓவியரா? உங்களுக்கும் அன்னை இல்லத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா?”

மனம் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது.

“ஆமாம். நீங்கள் யார் என்று…” என்று கேட்டேன்.

“நான்தான் கிருஷ்ணா. பெங்களூரில் இருக்கிறேன். இன்னும் இரண்டு பேர்…” என்று இழுத்தேன்.

“அவர்களெல்லாம் எனக்குத் தெரியும். நீதான் எங்கே இருக்கிறாய் என்று தெரியவில்லை. இந்தப் படத்தைப் பார்த்தவுடன், என் உள்ளுணர்வு சொன்னது நீதான் எங்கள் நண்பன் என்று. நாம் நால்வரும் ஒருமுறை சந்திக்கலாமா?”

“ஆமாம். முதலில் நாம் மட்டும் சந்திப்போம். அப்புறம் குடும்பத்துடன் சேர்ந்து சந்திப்போம்” என்று கூறி, உற்சாகத்தில் துள்ளிக் குதித்தேன்.

நாளை நான் அவர்களைச் சந்திக்கப் போகிறேன். என் நண்பர்களிடம் என்னை மீண்டும் சேர்த்த இந்த ஓவியத்தை வரைய வைத்த ஆண்டவனுக்கு நன்றி!

இனி…

பிரிந்தவர் கூடினால் பேசவும் தோன்றுமோ!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன