தமிழ்செல்வன் ரத்னபாண்டியன்/விஐபி இருக்கை

டிரினிடாட் தீவிலுள்ள சுற்றுலா நகரம் துணபுண. அதனை ஒட்டிய கிராமம் பெனடிக்ட். சுற்றுலா நகரத்துக்குத் தேவையான பொருட்களும், வேலைக்கு ஆட்களும் பெனடிக்ட் கிராமத்திலிருந்து செல்வார்கள். பெனடிக்ட் ஓரளவு வறுமையான ஊரே.
ஜேக்கப், ரிச்சர்ட், ஜோசப் மற்றும் ஹெய்ன்ஸ் நால்வரும் நண்பர்கள். தெருவில் தினமும் வெறியுடன் கிரிக்கெட் ஆடும் பைத்தியங்கள் என்றே அவர்களைக் கூறலாம்.
ஒருநாள், பக்கத்து ஊரில் லாரா தலைமையிலான ஒரு அணிக்கும், துணபுண உள்ளூர் அணிக்கும் இடையே இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதாக விளம்பரம் வந்தது. நால்வருக்கும் கிரிக்கெட் பார்க்க ஆசை. ஆனால், வீட்டில் காசு கிடையாது.
நால்வரும் ஆறு கிலோமீட்டர் நடந்து அந்த மைதானத்தை அடைந்தனர். நுழைவுக் கட்டணம் நூறு டிரினிடாட் டாலர் (₹1,377) என்ற அறிவிப்பைப் பார்த்ததும் நால்வருக்கும் மயக்கமே வந்துவிட்டது. எப்படியாவது உள்ளே நுழைய முடியுமா எனச் சுற்றிச் சுற்றி வந்தனர்.
இவர்களது உடையையும் கண்களில் மின்னிய ஆர்வத்தையும் பார்த்த பக்கத்துக் கடைக்காரர் இரக்கப்பட்டு, தன்னிடமிருந்த அனுமதிச் சீட்டுகள் சந்தோஷமாகக் கொடுத்தார்.
ஜேக்கப், “ஸார், நான் பெரிய பிளேயர் ஆனவுடன், என் மேட்ச் எல்லாவற்றுக்கும் உங்களுக்கு விஐபி இருக்கைதான்!” என்று நன்றி கூறினான்.
பிற்காலத்தில் ஜேக்கப் டிரினிடாட் அணியில் இடம் பெற்ற பிறகு, அந்தக் கடைக்காரருக்கு எப்போதுமே விஐபி இருக்கை கிடைத்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன