அர்ஜுனன்/மண்டகப்படி

    பள்ளி விடுமுறை நாளில் வழக்கமாகக் கூடும் நண்பர்கள், தோளில் கை போட்டுச் சிரித்துப் பேசிக்கொண்டு சென்றனர்.
    “டேய், இந்த வருஷம் ஊர் திருவிழாவுல நாம எல்லோரும் ஒரே அணியில சேர்ந்து விளையாடுவோமா?”
    ஒருத்தன் கேட்டான். அவன் இந்த ஊருக்குப் புதிதாக வந்தவன்.
    “அட போடா… இங்கே ஊர் திருவிழாவே மண்டகப்படி வைத்துத்தானே கொண்டாடுறாங்க? அந்தந்தத் தெருக்காரங்கதான் அந்தந்தத் தெரு விளையாட்டுப் போட்டியில கலந்துக்க முடியும்,” சற்றே பெரியவன் சொன்னான்.
    “ஆனா ஸ்கூல்ல எல்லோரும் சேர்ந்து தானே படிக்கிறோம், விளையாடுறோம்?” இன்னொருத்தன் சந்தேகத்தைக் கேட்டான்.
    “அது உண்மைதான். ஆனா ஊர் திருவிழான்னு வந்திட்டா, பெருசுங்க சொல்றதைத் தான் எல்லோரும் கேப்பாங்க.”
    “இந்தப் பிரிவினையைச் சீக்கிரம் உடைக்கணும்டா!” என்று ஆவேசமாகப் பேசினான் ஒருவன்.
    அவர்களி பேச்சை கேட்டபடியே பின்னால் வந்துகொண்டிருந்த அந்த ஊர் இளைஞர்கள், ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
    தங்களால் முடியாத மாற்றத்தை இந்தக் குழந்தைகள் நிகழ்த்திக் காட்டுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் துளிர்விட்டது.

    மறுமொழி இடவும்

    உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன