கி. பார்வதி/நாலு பேருக்கு நன்றி

மணி, கோபாலு, சரவணன், மீனா ஆகிய நால்வரும் ஒருவர் கழுத்தில் மற்றொருவர் கை போட்டுக்கொண்டு திரியும் நண்பர்கள்.

நெருப்புப் பந்தைப் போன்ற சிவப்புச் சூரியன் மலைக்குப் பின்னால் மெதுவாக இறங்கும் அழகிய காட்சியைக் காணச் சென்றனர்.

நடந்து செல்லும்போது, ஒரு வண்டியில் வந்த இருவர் அவர்களைக் கடந்து சென்றனர். இருவரும் சிறுவர்களைத் திரும்பிப் பார்த்தனர். அவர்களில் ஒருவன் கண்கள் மட்டும் தெரியும்படி முகம் முழுவதையும் மறைத்துக்கொண்டு சென்றான்.

“ஏய்! பசங்க நம்மைப் பார்த்துட்டாங்கடா!” என்று ஒருவன் பதறினான்.

“கிராமத்துப் பசங்களுக்கு ஒண்ணும் தெரியாதுடா. கவலைப்படாதே!” என்று முகமூடி அணிந்திருந்தவன் தன்னை அதிபுத்திசாலியாக நினைத்துக்கொண்டு சொன்னான்.

அப்போது அங்கு வந்த காவல்துறை வாகனம் திரும்பிச் செல்லலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, சிறுவர்களை மறித்து, “உள்ளே யாராவது போனாங்களா?” என்று கேட்டனர்.

“ஆமாமாம். ரெண்டு பேரு போனாங்க. அதுல ஒருத்தரு மூஞ்சியெல்லாம் மூடிக்கிட்டுப் பூச்சாண்டி மாதிரி இருந்தாரு!”

அசுர வேகத்தில் சென்ற காவல்துறை வாகனம், எல்லையில் இருந்த பாழடைந்த மண்டபத்திற்குள் சத்தமில்லாமல் நுழைந்து தேடுதல் வேட்டையைத் தொடங்கியது.

அப்போதுதான் அந்த இருவரும் குகை போன்ற இருண்ட இடத்தில் நகைகளைப் பரப்பிப் பங்கு போட்டுக்கொண்டிருந்தனர்.

தேடி வந்த காவல்துறையினர் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.

கிராமத்துச் சிறுவர்களுக்கு மனதார நன்றி தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன