
மழை பெய்யும் போதெல்லாம் வருண், சாந்தியைக் குடை பிடித்து அழைத்து வருவது இப்போது ஒரு தினசரி வழக்கமாகிவிட்டது.
அன்றும் அப்படித்தான்.
“எத்தனை தடவை சொல்வது? மழை பெய்யும் என்று தெரிந்தும் ஒரு குடையை எடுத்துக்கொண்டு போக வேண்டியதுதானே? இப்போது பார்… முழுவதுமாக நனைந்திருக்கிறாய்!”
சாந்தி சின்னதாகச் சிரித்தாள்.
“இல்லை, வருண்… நான் கிளம்பும்போது மழையே இல்லையே!”
“சரி, எதற்காக வெளியே போனாய்?”
சாந்தி சற்று யோசித்தாள். பிறகு தயக்கத்துடன் சொன்னாள்.
“சாரி, வருண்… எதற்காகப் போனேன் என்பதே எனக்கு ஞாபகம் இல்லை.”
வருணின் முகம் சட்டென்று மாறியது. மருத்துவர் சொன்ன வார்த்தைகள் அவன் நினைவுக்கு வந்தன.
டிமென்ஷியா…
அவள் கையைப் பிடித்துக்கொண்டு குடைக்குள் அழைத்துச் சென்றான்.
அப்போது சாந்தி அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொன்னாள்.
“உனக்கு ஞாபகம் இருக்கா, வருண்? சின்ன வயதில் மழை பெய்யும்போதெல்லாம் நீ குடை இல்லாமல் வெளியே ஓடுவாய். உன்னைத் தேடிக்கொண்டு நான் குடையோடு வருவேன். என் கையைப் பிடித்துக்கொண்டு குடைக்குள் நடந்து வருவாய்…”
வருணின் கண்கள் கலங்கின.
அவள் கையை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான்.
மழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்தது.
அலுவலக வேலைகளில் மூழ்கியிருந்ததால், தன்னைக் கவனிக்க வருணுக்கு நேரமில்லை என்பதை நினைத்து வருந்தாமல், மனதிற்குள் டிமென்ஷியாவுக்கு நன்றி கூறி
