
மதிற்சுவரின்
இரும்புக்கதவைப் பூட்ட
மறந்ததில்
நாயொன்று
வாசற்புறமிருந்த பூச்செடியின்கீழ்
நான்கு குட்டிகளுக்குத் தாயாகியிருந்த்து.
பூஜைக்குப் பூப்பறித்தவர் உள்ளே சென்று
பால்கிண்ணத்தோடு வந்து
நாய்க்கு வைத்தார்.
பாலைப் பருகி
பார்வையால் நன்றி சொன்னது நாய்.
பூக்களை நாய்மேல் தூவி
கரங்கூப்பி வணங்கினார்.
பூஜை செய்யவில்லையா? கேட்டேன்.
செய்துவிட்டேனே என்றார்.
