இலக்கிய இன்பம் 19/கோவை எழிலன்

நெல் வகைகள்

முக்கூடற்பள்ளு என்னும் நூல் இரு மனைவியரைக் கொண்ட பள்ளனின் வாழ்வைக் காட்டுவது. பள்ளன் உழவுத் தொழில் செய்பவனாகையால் இந்நூலில் உழவுத் தொழிலின் கூறுகள் மிக விரிவாக விளக்கப் படுகின்றன.

பசுமைப் புரட்சி, விஞ்ஞானம், அதிக மகசூல் போன்ற சொற்களால் கவரப்பட்டு நாம் இயற்கை விவசாயத்தை விட்டு வெகுதூரம் வந்து விட்டோம். மீண்டு செல்ல மனமிருந்தாலும் இது புதைகுழி என்பதால் மீள இயல வில்லை.

நாம் இதனால் இழந்த 23 நெல் வகைகளை பட்டியலிடுகிறது பள்ளன் தான் விதைத்ததாக ஆண்டைக்குக் கூறும் இப்பாடல்.

“சித்திரக் காலி, வாலான், சிறை மீட்டான், மணல் வாரி
செஞ்சம்பா, கருஞ்சூரை, சீரகச் சம்பா,
முத்து விளங்கி, மலை முண்டன், பொற் பாளை, நெடு
மூக்கன், அரிக்கிராவி, மூங்கில் சம்பா,
கத்தூரி வாணன், காடைக் கழுத்தன், இரங்கல் மீட்டான்
கல்லுண்டை, பூம்பாளை, பாற்கடுக்கன், வெள்ளை,
புத்தன், கருங்குறுவை, புனுகுச் சம்பாவும் இரு
பூவுக்கும் விதை சேரில் போட்டேன் ஆண்
டே!

One Comment on “இலக்கிய இன்பம் 19/கோவை எழிலன்”

  1. சீரகச் சம்பா சாப்பிட்ட ஞாபகம் இருக்கு. கோவை எழிலன் விளக்கி இருக்கும் ‘முக்கூடற்பள்ளு ‘ பழந்தமிழ் இலக்கியப் பாடல் சொல்லும் மற்ற இருபத்திரண்டு நெல் வகைகள் நாம் இழந்த நெல் வகைகள் . ஒருவேளை மறைந்த இயற்கை விவசாய மேதை ‘ நம்மாழ்வார் ‘ அவர்களின் கரூர் ‘வானகம் ’ பண்ணையில் கிடைக்கலாம் .

Comments are closed.