ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 38/அழகியசிங்கர்

22.12.2021 –  புதன்  


ஆசிரியர் பக்கம்



மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

மோகினி:  இந்த முறை புத்தகக் கண்காட்சி எப்படி இருக்கும்?

  அழகியசிங்கர் : மோசமாகவிருக்கும். 

ஜெகன் :  ஏன்?

மோகினி :   அவநம்பிக்கையோடு இருக்காதீர்கள். 

அழகியசிங்கர் : அவநம்பிக்கை இல்லை.  உண்மையைத்தான் சொல்கிறேன்.

மோகினி :  கொரானா தொற்று தீவிரமடைந்து விடும் என்ற பயமா?

அழகியசிங்கர் : அதற்கான வாய்ப்பு இருக்கிறது.

ஜெகன் :  நீங்கள் அதிகமாகப் புத்தகம் கொண்டு வர வில்லையே?

அழகியசிங்கர்:  ஆமாம். 

ஜெகன் :2019 ல் புத்தகக் காட்சியில் நீங்கள் வாங்கிய புத்தகங்களை நீங்கள் படிக்கவில்லை.

அழகியசிங்கர் :உண்மைதான்.அதனால் இந்த முறை எந்தப் புத்தகமும் வாங்க வேண்டாமென்று நினைக்கிறேன்.

மோகினி :  இலக்கணத்துக்கா க இலக்கியமா? இலக்கியத்துக்காக இலக்கணமா?

ஜெகன் :  சி.சு செல்லப்பா சொன்ன கருத்து அது.

மோகினி :  உங்கள் கருத்தென்ன?

அழகியசிங்கர் : சி சு செல்லப்பா கூறினாலும் அதை நாம் பின்பற்ற முடியாது.  அதே சமயம் தமிழாசிரியர் சொல்வது மாதிரியும் நாம் நடந்து கொள்ள முடியாது.  எந்தப் புத்தகமும், பத்திரிகையும் தப்பில்லாமல் அச்சடிக்க முடியாது.

ஜெகன் : பெரிய முயற்சி செய்தால் இதெல்லாம் சாத்தியம்.

அழகியசிங்கர் : அந்தக் காலத்தில் க்ரியாவில் புத்தகம் அடிப்பார்கள். இரண்டு மூன்று பேர்கள் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்ப்பார்கள்.

மோகினி :   நீங்க நடத்தும் கூட்டத்திற்கு என்ன அர்த்தம்.  அதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறீர்கள்?

அழகியசிங்கர் :  பெரிதாக ஒன்றுமில்லை. கவிதை கூட்டமாக இருந்தாலும் கதைக் கூட்டமாக இருந்தாலும் நான் சிலர் பேர்களைப் படிக்க வைக்கிறேன்.  அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. நானும் கூடவே படிக்கிறேன்.

மோகினி :  இன்றைய  இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.

அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.

ஜெகன்: இன்று பேசியது போதும்.

அழகியசிங்கர்.  இரவு வணக்கம்.

(எழுதியது இரவு 10.51)