
காம்போடு பூவைப் பறி
இதழ்கள் உளைந்து விடும்
அழகான ஓவியம் ஆராதனைக்குரியவை
சிட்டுக் குருவியாய் சுற்றித் திரிய ஆசையில்லை
பருந்தாய் வேட்டையாடி அலைய விருப்பமில்லை
பனித்துளியாய் புற்களின் பூக்களில் விளையாடுவேன்
நாரிலிருந்து மலர்கள் கழன்று விழுகின்றன
விழிகளிலிருந்து அனல் துளிகள் சொட்டுகின்றன
ரோஜாச்செடியில் அரும்புகள் கருகுகின்றன
வாட்டுகிறது வாடைக்காற்று
இதமூட்டுகிறது தென்றல்
கெவிப்பள்ளங்களை
தாண்டித் தாண்டிப் போகிறேன்
ஒற்றைப் பனைமரம் ரெம்ப நாளா தனித்துக் கிடந்தது
சுற்றுக் காடுகளில் கடலைச்செடிகள்
பூக்கள் பூத்து சிரித்தன
ஜோடித் தூக்கனாங்குருவிகள் எங்கிருந்தோ வந்து கூடு கட்டின
ஆலமரம் தலைவிரி கோலமாய் நிற்கிறது
கன்னுக்குட்டி மாசுகள் சடைகளில் தொங்குகின்றன
குடியிருந்த சடை முனியாண்டி நாத்தம் தாளாமல் ஓடிப்போய் வெகு நாளாச்சு.
