
வீதியில் படுத்திருந்த
தாய்நாயும் குட்டிகளும்
மிரண்டோடின
காலைநடை செல்வோர்
மூக்கைப்பிடித்துக் கொண்டு
செல்கிறார்கள்
தனிப்பயிற்சிக்குச்
செல்லும் மாணவர்களோ
அச்சத்துடன்
பக்கத்துத் தெருவின்
குடிசை வாசிகள்
பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்
நான்கு வீடுகள் தள்ளிஉள்ள
காலிமனையில்
கொண்டுபோய்ப் போடாமல்
நடுத்தெருவில்குப்பைகளைக்
கொளுத்துகிறார்
எதிர்வீட்டுப் பெண்மணி
என் செய்வேன்?
