
மென்சிறகால் ஆற்றும்
கடந்த பாடலைப் போலவே அதே பாலையில் மற்றொரு காட்சி. இலைகள் உதிர்ந்த ஒரு மரத்தின் தன் துணையோடு அமர்ந்திருக்கிறது ஓர் ஆண் புறா. கோடையின் வெப்பத்தைத் தாங்காமல் வாடும் தன் துணையைக் கண்டு வாடும் ஆண்புறா தன் சிறகை விரித்து பெண் புறாவிற்கு நிழலை அளிப்பதோடு மெல்ல விசிறியும் விடுகிறது. யானைகளின் காதலை விஞ்சும் இப்பறவைகளின் காதலை உணர்த்தும் அதே கலித்தொகைப் பாடலின் அடிகள்
“இன்பத்தின் இகந்துஒரீஇ
இலைதீந்த உலவையால்
துன்புறூஉம் தகையவே
காடுஎன்றார், அக்காட்டுள்
அன்புகொள் மடப்பெடை
அசைஇய வருத்தத்தை
மென்சிறக ரால்ஆற்றும்
புறவுஎனவும் உரைத்தனரே!”
