
சாம்பல் வண்ணத்தில் தொடங்கிய சித்திரம்
அழுத்தக் கருப்பில்
பக்கவாட்டில் இன்னும் எழிலாய்
மெல்லிய மஞ்சள்
இழைய
மேலாப்பில்
வட்டப் பொட்டாகச்
சிவப்பும்
அருகில் வாவென
அழைத்தது ஓவியம்
சிற்பமோ என
சிலிர்த்தது
நெருக்கத்தில் பார்க்க
தொடலாமா எனக்
கொஞ்சம் ஆர்வத்துடன்
பக்கம் போகையில்
பட் பட் என்றது
சித்திரச் சிற்பம்
நிமிடமாய்ப் போக்குக் காட்டி
விட்டு விடுதலையாகிப்
பறந்த திசையில்
வேறொரு
அடர்ந்த பசுமைத்
தாவரத் திரட்சியில்
கண்ணுக்குப் புலப்படாது அமர்ந்ததும்
உதகைமண்டலத்து
ரோசா தோட்டத்தின்
சிறகுகள் கொண்ட
சித்திரச் சிற்பம்
அழைக்கிறது மீண்டும்
அருகில் வாவென…

நன்று
சூப்பர்