காதலெனும் வேதனை/வசந்ததீபன்


வெட்கம் உன் முகத்திரை
நாணத்தைப் பூண்டிருக்கிறாய்
ஆடையெனும் மேகத்துள் ஒளிர்கிறாய்
புன்முறுவலை பூத்துவலையாக்குகிறாய்
என் இதயம் நனைந்து நடுங்குகிறது
மெல்லத் துவட்டிட
உன் இதழ்கள் கொண்டு வா
என் சருமம் பனித் தூவல்
உன் தீண்டல் உஷ்ணமூட்டும்
உன் அருகாமை கதகதப்பூட்டும்
நுரை மூடிய குமிழிகள் நகர்கின்றன
தூறல் தூறிக் கொண்டிருக்கிறது
நதி போலக் கலங்குகின்றேன்
மெல்லிய பூங்காற்றாய் வீசுகிறாய்
என் மேனியெல்லாம் புல்லரிக்கிறது
மனதுக்குள் காய்ச்சல் போல
சரீரம் குதுகுதுக்கிறது
உதடுகள் உலர்ந்து போகின்றன
உள்ளூர வெப்பம் ஊற்றெடுக்கிறது
உன் இதழ் மயிலிறகால் வருடிவிடு.

🦀