
உன் அன்பு என்னைக்
கனிய வைத்திருக்கிறது
உன் அணைப்பு என்னைப்
பூக்க வைத்திருக்கிறது
உன் ஆளுகை என்னைக்
கடைந்து கொண்டிருக்கிறது
அழகு மயமானவள் நீ
அன்பு வயமானவள் நீ
அதி அற்புதமானவள் நீ.
சொல்வதற்கு நிறைய இருக்கின்றன
சொல் ஒன்று தான் கிடைக்கவில்லை
சொல்லாமல் என்னால்
இருக்க முடியவில்லை
நன்றிகள் சொல்வேன்
நாவினால் அல்ல
என் இதயம் உனக்காக
பூக்கள் பூக்கும்
ஒரு கதை சொல்கிறேன்
உம் கொட்டிக் கேப்பாயா?
உயிர் உயிரோடு கலந்த உண்மை
என் பாடல் உன் தேடல்
என் தேடல் உன் நாடல்
என் நாடல் உன் கூடல்
நட்சத்திரங்கள் பாடுகின்றன
வெண்ணிற மேகங்கள்
வானமெங்கும் நடனமிடுகின்றன
ஒளிஉமிழ்ந்து
பிரபஞ்சம் சிலிர்க்கிறது காலாதீதமாய்.

சிறப்பான கவிதை.
நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே